3 ஆண்டுகளாக இளைஞரை விடாமல் துரத்தி பழிவாங்கும் காக்கை கூட்டங்கள் - அதிர்ச்சி தகவல்.



Crows revange

மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டம் சுமேலா கிராமத்தை சோர்ந்தவர் சிவா கேத். இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வலையில் சிக்கி இருந்த காக்கை குஞ்சை காப்பாற்ற நினைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக காக்கை குஞ்சுகள் இறந்துள்ளனர்.

ஆனால் இந்த உண்மை தெரியாத காக்கைகள் அன்று முதல் இவரை பழிவாங்க காத்திருகின்றன. சிவா வீட்டை விட்டு வெளியேறியதும் அவரை தாக்க தொடங்கிவிடுகின்றன. இதனால் சிவா எப்போதும் கையில் குச்சியுடன் தான் செல்கிறார்.

இதுக்குறித்து சிவா கூறுகையில் நான் அவற்றை காப்பாற்ற தான் நினைத்தேன். ஆனால் இப்படி ஆகி விட்டது என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி நாளுக்கு நாள் காக்கை கூட்டம் அதிகமாகி வருவதால் கால்நடை மருத்துவரிடம் ஆலோசனைக்கு சென்றுள்ளார் சிவா. 

ஆனால் மருத்துவர்கள் காக்கைக்கு அறிவு திறன் அதிகம் என்றும் மேலும் அதனிடம் தவறாக நடந்து கொண்டால் இப்படி தான் நடந்து கொள்ளும் எனவும் சாதாரணமாக கூறியுள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.