#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தயவுசெய்து இதை மட்டுமாவது செய்யுங்கள்! புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரரின் மனைவி கண்ணீருடன் கோரிக்கை!
கடந்த ஆண்டு ஸ்ரீநகரில் இருந்து ஜம்முகாஷ்மீருக்கு 2000க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது புல்வாமா என்ற இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலில் துணை இராணுவ படையினர் 40பேர் கொல்லப்பட்டனர். அதில், தமிழகம் தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணி, அரியலூரை சேர்ந்த சிவசந்திரன் என்ற துணை இராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். இந்நிலையில் பிப்ரவரி 14 அன்று நடைபெற்ற புல்வாமா தாக்குதலின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்திய நாடு முழுவதும் உயிரிழந்த வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலிஅளித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் இதுகுறித்து சிவச்சந்திரனின் மனைவி காந்திமதி கூறுகையில் பிப்ரவரி 14 காதலர் தினத்தை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் தினமாக அறிவிக்க வேண்டும். இதனால் ராணுவ வீரர்கள் செய்த தியாகம் குறித்து அனைவரும் அறிய முடியும்.
மேலும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் சிலை திறக்கப்படும் என்று அறிவித்து ஒரு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் சிலை திறக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்களது நாட்டிற்காக உயிரை தியாகம் செய்தது அனைவருக்கும் தெரியவரும்.
மேலும் எனது கணவருக்கு குழந்தைகளை நன்கு படிக்க வைத்து, மகனை இராணுவத்திற்கும், மகளை ஐஏஎஸ் ஆக்கவேண்டும் என்பதும் ஆசை. அவர் ஆசைப்படி குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று காந்திமதி கூறியுள்ளார்.