மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்முகத்துடன் வேலைக்கு சென்றவர் பிணமாக திரும்பிய சோகம்.. நொடியில் நடந்த விபரீதத்தால் பரிதாபம்.!
கட்டிட வேலையின் போது தவறி விழுந்த தொழிலாளி பலியான சோகம் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி, சித்திரை சாவடி கிராமத்தை சார்ந்தவர் சிவகணபதி (வயது 32), இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 மகன்கள், 1 மகள் இருக்கின்றனர்.
சம்பவத்தன்று, கணபதி புதுச்சேரி முத்தையால்பேட்டை நகரில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் பணியாற்றி வந்துள்ளார். கட்டிடத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் அவர் டைல்ஸ் ஒட்டிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக கால் இடறி சிவகணபதி தவறி கீழே விழுந்துள்ளார். இவரை மீட்ட சக தொழிலாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக முத்தியால்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.