திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
போட்டாபோட்டி.. ஆட்டோவின் மீது மோதிய அரசு பேருந்து.. கரப்பான் பூச்சி போல கவிழ்ந்த ஆட்டோ.. 15 பேர் படுகாயம்.!
கடலூரில் இருந்து புதுச்சேரி மாநிலத்தின் ரெட்டிச்சாவடி, கிருமாம்பாக்கத்திற்கு அனுமதியின்றி ஷேர் ஆட்டோக்கள் அதிகளவில் இயங்கி வருகிறது. நேற்று காலை 10 மணியளவில் கடலூரில் இருந்து புறப்பட்ட ஷேர் ஆட்டோ, பயணிகளை ஏற்றிக்கொண்டு ரெட்டிச்சாவடி நோக்கி பயணம் செய்தது.
இந்த ஆட்டோ, கன்னியகோவில் பெட்ரோல் பங்க் அருகே வருகையில், ஆட்டோவுக்கு பின்புறம் வந்த தமிழ்நாடு அரசு பேருந்து ஷேர் ஆட்டோவின் மீது உரசியுள்ளது. இதனால் நிலைதடுமாறி ஆட்டோ சாலையோர பள்ளத்தில் தலைகுப்பற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. ஆட்டோவில் இருந்த பயணிகள் சாலையில் விழுந்து கிடந்தனர்.
இந்த விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த 8 மாத கர்ப்பிணி, குழந்தை உட்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூரில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் கல்வி, வேலை, மருத்துவம் போன்ற காரணத்திற்காக கிருமாம்பாக்கம் வந்து செல்வதாகவும், இவர்களை வைத்து ஷேர் ஆட்டோ இயக்கப்பட்டு வருவதாகவும், அவ்வாறு இயங்கும் ஷேர் ஆட்டோக்கள் விதிகளை மீறி ஆட்களை ஏற்றுவது, போட்டிபோட்டு வேகத்தில் பயணிப்பது என இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.