திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மாரடைப்பால் பாதிக்கப்பட்ட கபில் தேவின் தற்போதைய நிலை என்ன? மருத்துவமனை தகவல்
திடீர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கபில்தேவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், சில நாட்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் கபில் தேவ். இவரது தலைமையில் இந்திய அணி 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையைகைப்பற்றியது. மேலும் இந்திய அணிக்காக 31 டெஸ்டுகள், 225 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார் கபில் தேவ்.
தற்போது 61 வயதாகும் இவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இதய ரத்தக்குழாய் அடைப்பை நீக்க அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனனர்.
கபில் தேவ் தற்போது ஓரளவிற்கு நலமுடன் இருப்பதாகவும், சில நாள்களில் கபில் தேவ் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கபில் தேவ் விரைவில் குணமடைய வேண்டும் என்று இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, அனில் கும்ப்ளே, கெளதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் ட்வீட் செய்துள்ளார்கள்.