#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரியாணியில் கிடந்த மர்ம பொருள்..! சாப்பிட்ட கஷ்டமருக்கு காத்திருந்த அதிர்ச்சி! என்ன கிடந்தது தெரியுமா?
சாப்பிடும் உணவில் அருவருக்க தக்க பொருட்கள் கிடப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சீனிவாஸ் என்ற நபர் சோமாடோ வழியாக ஹைதராபாத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.
ஆர்டர் செய்த பிரியாணி வீட்டிற்கு வந்ததும் அதை பிரித்து ஆசையாக சாப்பிட தொடங்கியுள்ளார் சீனிவாஸ். சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே அவரது வாயில் ஏதோ விதியசமான பொருள் இருப்பதை உணர்ந்து அதை வெளியே எடுத்து பார்த்துள்ளார் சீனிவாஸ்.
உணவில் கிடந்த இரும்பு கம்பி ஓன்று அவரது வாய்க்குள் சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாஸ் அதை புகைப்படம் எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், சீனிவாஸ் கொடுத்த புகாரை அடுத்து அதிகாரிகள் குறிப்பிட்ட உணவகத்தை சோதனை செய்து 5,000 அபராதம் விதித்துள்ளனனர்.
மேலும், சோமாடோ வழியாக உணவு ஆர்டர் செய்ததால், சோமாடோ நிறுவனமும் குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு தங்கள் வருத்தத்தை தெரிவித்ததோடு அவருக்கு இலவச கூப்பன்களை வழங்கியுள்ளது.