மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சமையல் சிலிண்டர் வெடித்து கோர விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள ககோரியை சேர்ந்தவர் முஷீர். குடும்பத்துடன் ஹதா ஹஸ்ரத் சஹாப் வார்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் வெயிலில் தாக்கத்தால் வீட்டில் இருந்த சிலர் திடீரென வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.
இதனால் வீடு முழுவதும் தீப்பிடித்தது. மேலும் சிலிண்டர் பிடித்ததில் வீட்டின் மேற்கூரை மற்றும் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
மேலும், இந்த தீ விபத்தில் 4 நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில், மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.