திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பீகாரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்... வைரலாகும் வீடியோ!!
பீகார் மாநிலம் பாலி கிராமத்தைச் சேர்ந்தவர் லாலன் குமார் - பூனம் வர்மா தம்பதியினர். இவர்களுக்கு சாந்தினி என்ற மகள் உள்ளார். சாந்தினிக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு திருமண ஏற்பாடுகள் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் திடீரென பூனம் வர்மாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பூனம் வர்மாவின் உடல்நிலை மிகவும் மோசமடைத்துள்ளதால் எப்போது வேண்டுமானாலும் உயிரிழந்து விடுவார் என கூறியுள்ளனர்.
இதனை கேட்டு பூனம் வர்மா குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்ட சமயத்தில் இப்படி நடந்து விட்டதே என வருத்தத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் பூனம் தனது கடைசி ஆசையாக மகளின் திருமணத்தை காண ஆசைப்பட்டுள்ளார்.
தனது தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற நினைத்த சாந்தினி மருத்துவமனையிலேயே தனது தாயின் கண்முன் திருமணம் செய்து கொண்டார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
मरती मां की ख्वाहिश देख ICU में हुई बेटी की शादी #Bihar #ICU pic.twitter.com/vpxDbcJbnr
— Aman Kumar Dube (@Aman_Journo) December 26, 2022