மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டிவியை நிறுத்திய மாமியாரின் 3 விரல்களை கடித்து வெறிதீர்த்த மருமகள் : மாமியார்களே உஷார்...!
தொலைக்காட்சியை மாமியார் அணைத்ததால் ஆத்திரமடைந்த மருமகள், மாமியாரின் 3 கை விரல்களை கடித்து பதம்பார்த்த சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம், அம்பர்நாத் பகுதியில் வசித்து வருபவர் விருஷாலி (வயது 60). இவரின் மருமகள் விஜயா (வயது 32). விருஷாலி சம்பவத்தன்று தனது வீட்டில் பஜனை பாடியுள்ளார். அப்போது, மருமகள் விஜயா டிவியில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டுக்கொண்டு இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விருஷாலி மருமகளிடம் டிவி சத்தத்தை குறைக்க வேண்டி கோரிக்கை வைத்துள்ளார். இதனை மருமகள் கண்டுகொள்ளாத நிலையில், மாமியார் வருஷாலி டிவியை அணைத்துள்ளார். இதனால் இருதரப்பு மோதல் ஏற்படவே, ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற மருமகள் விஜயா மாமியாரின் கைவிரலை கடித்து குதறியுள்ளார்.
வலி பொறுக்க இயலாத விருஷாலி கதறி துடித்த நிலையில், விருஷாலியின் கணவர் தாயை காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆத்திரம் அடங்காத விஜயா கணவரின் கன்னத்திலும் ஓங்கி அறைந்து இருக்கிறார். மனைவியின் கோபத்தை புரிந்துகொண்ட கணவரும் செய்வதறியாது திகைத்துள்ளார்.
மாமியாரின் 3 விரல்களை முறுக்குபோல கடித்த பின் ஆத்திரம் அடங்கவே, விருஷாலியை அவரின் மகன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக விருஷாலி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, விஜயாவின் மீது வழக்குப்பதிந்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.