மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இனி வெளிநாட்டு பயணிகள் இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்! வெளியான புதிய அதிரடி தகவல்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. மேலும் இதனால் நாளுக்கு நாள் பாதிப்புகள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த மார்ச் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டது. மேலும் இந்நிலையில் சர்வதேச விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது, வந்தே பாரத் மிஷன் திட்டத்தின்கீழ் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்கள் பலரும் சிறப்பு விமானங்கள் மூலம் சொந்த ஊருக்கு திருப்பி அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்காக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.
இதன்படி தற்போது
சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள், அவர்களுடையே சொந்த செலவில் விமான நிலையம் ஏற்பாடு செய்யுமிடத்தில் கட்டாயம் 7 நாள்கள் தனிமைபடுத்திக் கொள்ளவேண்டும். அதன்பிறகு அவர்கள் வீட்டில் ஒருவாரம் தனிமைபடுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து டெல்லி விமான நிலையம் வருபவர்கள் இந்த நிபந்தனையை ஏற்பதாக ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும். மேலும் கர்ப்பிணி பெண்கள் உட்பட 4 தரப்பினருக்கு இவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.