மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனா தடுப்பூசி போடுவதால் மரணம் ஏற்படுமா?? மக்களிடையே பரவும் தகவல்.. சுகாதார அமைச்சகம் விளக்கம்..
தடுப்பூசி போடுவதால் மரணம் ஏற்படும் என்பது தவறான செய்தி எனவும், மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா 2 வது அலை தீவிரமாக பரவி, தற்போது சற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அதேநேரம் இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடந்துவருகிறது. இதுவரை 23 கோடிக்கும் அதிகமானோருக்கு இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டதிற்கு பிறகு ஏற்படும் இறப்பிற்கு கொரோனா தடுப்பூசிதான் காரணம் என்ற தகவல் மக்கள் மத்தியில் பரவி வருகிரியாது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள சுகாதார அமைச்சகம், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு ஏற்படும் இறப்பிற்கும், அல்லது உடல்நல பாதிப்பிற்கும், தடுப்பூசி தான் காரணம் என மக்கள் தாமாக எந்த முடிவுக்கும் வந்துவிடக்கூடாது அறிவுறுத்தி உள்ளது.
கடந்த ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கி, ஜூன் 7 ஆம் தேதி வரை இதுவரை இந்தியாவில் மொத்தம் 23 கோடியே 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடபத்துள்ளது. தடுப்பூசி போட்டபிறகு 488 பேர் உயிரிழந்தனர் என சில ஊடக செய்திகள் வெளியாகின, தடுப்பூசி குறித்த முழுமையான புரிதல் இன்மை காரணமாக இது போன்ற செய்திகள் வெளியாவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவ்வளவு கோடி பேருக்கு தடுப்பூசி போட்ட பிறகும் நாட்டில் அதன் பக்கவிளைவுகள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு வெறும் 0.0002 சதவிகிதம் மட்டுமே எனவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.