மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Video: சைக்கிளில் சென்ற இளைஞருக்கு மரணபயத்தை காண்பித்த சிறுத்தை.. திடீரென பாய்ந்ததால் பயத்தில் ஆடிப்போன சம்பவம்.!
வனங்களை அழித்து நமது தேவைக்காக அதனை உபயோகம் செய்த நாட்களில் இருந்து வனவிலங்குகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. தனிமனித தேவையை அறிந்து உணர்ந்து செயல்படும் பலரும் வனவிலங்குகளுக்காக குரல் கொடுப்பது இல்லை.
இன்றுள்ள காலகட்டத்தில் வனத்தில் உணவுகள் கிடைக்காமல் அல்லாடும் விலங்குகள், அதன் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் மனிதர்கள் வைத்துள்ள உணவுகளை தேடி சாப்பிட்டு வருகிறது. சில இடங்களில் மனிதர்களே அதற்கு இரையாகும் நிகழ்வும் நடக்கிறது.
On Dehradun-Rishikesh Highway....
— Susanta Nanda IFS (@susantananda3) September 21, 2022
Both are lucky ☺️☺️ pic.twitter.com/NNyE4ssP19
இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டெஹ்ராடூன் - ரிஷிகேஷ் சாலையில் சைக்கிளில் சென்ற இளைஞரின் மீது சிறுத்தை பாய்ந்து அவரை தனது இரையாக்க நினைத்தது. ஆனால், அவரை தாக்கியதும் சிறுத்தை மீண்டும் வனத்திற்குள் சென்றதால் இளைஞர் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.