மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
12 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம்; செயல்பாடுகள் மாறிய சிறுவனை விசாரித்து அதிர்ந்துபோன பெற்றோர்.!
தனது மகனின் குணங்கள் மாறிஉள்ளதை அறிந்த பெற்றோர் விசாரித்தபோது பலாத்காரம் தொடர்பான பேரதிர்ச்சி உண்மை அம்பலமாகியுள்ளது.
டெல்லியில் உள்ள சாராய் ரோஹிலா, உலேமா பகுதியில் 12 வயது சிறுவன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுவனை அப்பகுதிஹியை சேர்ந்த மொஹம்மத் இஷ்ரான் தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.
தனிமையான இடத்தில் சிறுவனை இயற்கைக்கு மாறான பலாத்காரத்திற்கு உட்படுத்திய கயவன், கொலை செய்து விடுவதாக மிரட்டி பலமுறை அத்துமீறி இருக்கிறான்.
ஒருகட்டத்தில் சிறுவனின் செயல்பாடுகளில் உள்ள மாற்றத்தினை அறிந்த பெற்றோர் விசாரித்தபோது உண்மை அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து, வடக்கு டெல்லி காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவே, இஸ்ரான் தலைமறைவாகி இருக்கிறான். இதனையடுத்து, தனிப்படை அமைத்த காவல் துறையினர், போக்ஸோ உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.