திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வாடகைக்கு வீடுதேடிய 30 வயது பெண் பாலியல் பலாத்காரம்; வீடு காண்பிப்பதாக நடந்த பயங்கரம்.!
டெல்லியில் உள்ள வடக்கு பகுதியில் அமைந்துள்ள புராரி நகரில், 30 வயது பெண்மணி வாடகைக்கு வீடு தேடி இருக்கிறார்.
அப்போது, அவரை தொடர்புகொண்ட ஜிதேந்திரா சவுதாரி என்பவர், வாடகைக்கு வீடு இருப்பதாக கூறி ஆட்கள் இல்லாத வீடு ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு பெண்மணிக்கு குடிக்க தண்ணீர் கொடுத்த நிலையில், அவர் தண்ணீரை குடித்ததும் மயங்கி இருக்கிறார்.
இதனையடுத்து, ஜிதேந்தர் மற்றும் அவரின் நண்பர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மயக்கம் தெளிந்து எழுந்த பெண்மணி, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஜிதேந்திர சவுதாரி, அவரின் நண்பர் ஆகியோரை தேடி வருகின்றனர்.