மதுபானக்கொள்கை ஊழல் விவகாரம்; டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது?.. குவிக்கப்பட்ட காவலர்கள்.!
டெல்லியில் அமல்படுத்தப்பட்ட மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு, அதுதொடர்பான விசாரணைக்கு பின்னர் டெல்லி மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அமலாக்கத்துறை சார்பில் நடைபெற்ற விசாரணையில் இருவரும் கைதாகினர். மதுபான கொள்கை விவகாரத்தில், தனியார் மதுபானங்களுக்கு உரிமம் அளித்து, அரசுக்கு ரூ.2800 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக புகார் முன்வைக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சார்பில் சம்மன் வழங்கப்பட்டது. ஆனால், அவர் இன்று வரை விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை.
இந்நிலையில், இன்று டெல்லி மாநில முதல்வர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படும் நிலையில், அவரின் வீட்டு முன்பு காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு செல்லும் சாலையும் மூடப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி எம்.பி அதிஷி-யும் தனது ட்விட்டர் பக்கத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் சோதனைக்கு பின் டெல்லி முதல்வர் கைது செய்யப்படலாம் என தெரிவித்துள்ளார். இதனால் அம்மாநில அரசியல் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.