திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வாட்டர் ஹீட்டரில் கார்பன் மோனாக்சைடு வாயுக்கசிவு.. குளித்துக்கொண்டு இருந்த சிறுமி பரிதாப மரணம்.!
வாட்டர் ஹீட்டரில் இருந்து வெளியேறிய கார்பன் மோனாக்சைடை சுவாசித்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில், 15 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஜன. 31 ஆம் தேதி குளிக்க சென்ற சிறுமி நீண்ட நேரமாக குளியலறையை விட்டு வெளியே வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குளியலறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில், சிறுமி மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்ட பெற்றோர் விரைந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில், "ஹீட்டரில் இருந்து கசிந்த கார்பன் மோனாக்சைடு வாயுவை சிறுமி சுவாசித்தால் மரணம் அடைந்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக குளிர் காலத்தில் டெல்லியில் வெப்பநிலை மிகவும் குறைந்து கடும் குளிர் வாட்டி வதைக்கும் என்பதால், அங்குள்ள பெரும்பாலான இல்லங்களில் வாட்டர் ஹீட்டர் பொருத்தப்பட்டு இருக்கும்.
அதனை அவ்வப்போது பராமரித்து உபயோகம் செய்ய வேண்டும். அதனைப்போல, வெந்நீர் அதிகளவு சூடாகி வெளியேற்றப்படும் நீரில் உருவாகும் நீராவி, குறிப்பிட்ட வெப்பநிலையை கடக்கும் போது, மூடப்பட்ட அறையில் அதனை சுவாசித்தால் நேரடியாக நுரையீரலுக்கு சென்று மூச்சிரைப்புக்கு வழிவகை செய்யும். அதனால் கூட மரணங்கள் நிகழ்ந்தது உண்டு. வாட்டர் ஹீட்டர் உபயோகம் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்.
கார்பன் மோனாக்சைடு என்பது நிறமற்ற, சுவாசமற்ற வாயு ஆகும். அதனை சுவாசித்தால் சிறிது நேரத்தில் மயங்கி உடல் உறுப்புக்கள் செயலிழந்து உயிரிழந்துவிடுவோம் என்பது குறிப்பிடத்தக்கது.