டெல்லி நாடாளுமன்ற கட்டிடத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து...



Delhi-Fire-breaks-out-on-the-6th-floor-of-the-Parliament

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தின் 6 வது மாடியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த திடீர் தீவிபத்தை அணைக்க தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்துள்ளனர்.

5 தீ அணைப்பு வாகனங்களில் வந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை  அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் நிலைமை மோசமாகவே மேலும் 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைந்துள்ளனர்.


ஆனால் திடீர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.