#BigBreaking: டெல்லி அனுமன் ஜெயந்தி வன்முறை விவகாரம்.. ஆயுத சப்ளையர் என்கவுண்டர்., படுகாயம்..!
ஜஹாங்கிர்புரி வன்முறை விவகாரத்தில் ஆயுத சப்ளையராக செயல்பட்டு வந்தவர் தப்பி செல்லும் முயற்சியின் போது காவல் துறையினரால் சுட்டு பிடிக்கப்பட்டார்.
டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது, இருதரப்பு மோதல் ஏற்பட்டது. ஊர்வலம் சென்ற தரப்பினர் மீது எதிர்தரப்பினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் நிகழ்விடத்தில் கலவரம் ஏற்பட்ட நிலையில், அதனை கட்டுப்படுத்த காவல் துறையினர் மற்றும் கலவரத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் குவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் 20 க்கும் மேற்பட்டோர் தற்போது வரை கைது செய்யப்பட்ட நிலையில், தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக அன்சாரி மற்றும் முகம்மது என 2 குற்றவாளிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் அன்சாரி நீதிமன்ற விசாரணைக்கு செல்லும் போது, புஷ்பா படத்தில் வரும் நாயகன் போல தாடியை வருடிவிட்டு கேமரா முன்பு வித்தை காண்பித்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.
கலவரத்தில் தொடர்புடையவர்கள் அதிரடியாக வீடியோவின் அடிப்படையில் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜஹாங்கீர்புரி கலவரத்தில் அன்சாரி மற்றும் முகம்மது ஆகியோரின் குழுவுக்கு ஆயுதங்கள் விநியோகம் செய்ததாக கைது செய்யப்பட்டவர், காவல் துறையினரிடம் இருந்து தப்பி செல்லும் முயற்சியில் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த அவர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவனின் மீது காவல் நிலையத்தில் 60 க்கும் மேற்பட்ட வழக்குப்பதிவுகள் இன்று வரை நிலுவையில் இருந்துள்ளன. பிற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.