தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இராம நவமியில் போர்க்களமான நேரு பல்கலை., இருதரப்பு மோதலால் பெரும் பதற்றம்..!
அசைவ உணவு பரிமாறப்பட்ட பஞ்சாயத்தில் இருதரப்பு மோதிக்கொண்டதை தொடர்ந்து பல மாணவர்கள் காயம் அடைந்தனர். இராமநவமி பண்டிகையின் போது இடதுசாரி - வலதுசாரி என பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தொடர்பாக விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
டெல்லி நகரில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், இராம நவமி தினத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இந்த நிலையில், அங்கு சைவ - அசைவ உணவுகள் என தனித்தனியே சமைக்கப்பட்டதாக தெரியவருகிறது.
இராமநவமியை சிறப்பிக்காத மாணவர்கள் மற்றும் இடதுசாரி அமைப்பினர் அசைவ உணவுகளை சாப்பிட முயற்சித்ததாக தெரியவருகிறது. இதனால் இராம நவமியை சிறப்பித்த மாணவர்கள் வாக்குவாதம் செய்யவே, அங்கு இருதரப்பு மோதல் ஏற்பட்டது. இருகுழுவும் தங்களை மாறிமாறி தாக்கிக்கொண்டுள்ளது.
ABVP hooligans stopped residents inside JNU from having non Veg food
— Aishe (ঐশী) (@aishe_ghosh) April 10, 2022
ABVP also assaulted the mess secretary of the Hostel.
Unite against the hooliganism unleashed by ABVP inside campus premises.https://t.co/3MpRE9zXn4 pic.twitter.com/Fy3HU7qg8J
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், காயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். மேலும், கல்லூரி வளாகத்தில் காவல் துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது.