திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காதலை ஏற்றுக்கொள்ளாத பெண் காவல் அதிகாரி கொலை: 42 வயது காவலர் வெறிச்செயல்.. 3 ஆண்டுகள் கழித்து அம்பலமான உண்மை.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள புலன்சாகர் பகுதியில் வசித்து வரும் இளம் பெண் மோனா. பிஎட் படித்த இவர் அரசு பணியாளராக தேர்வாக வேண்டும் என விரும்பி, அதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்க்கப்பட்ட இவர், டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்துள்ளார். அதனைத்தொடர்ந்து, சப் இன்ஸ்பெக்டர் தேர்வில் வெற்றி பெற்ற நிலையில், உத்தரப்பிரதேசத்தில் பணி கிடைத்ததால் அதனை விடுத்து விட்டு, டெல்லியில் தங்கி இருந்து யூபிஎஸ்இ தேர்வுக்காக தயாராகி வந்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் திடீரென மாயமான நிலையில், குடும்பத்தினர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில், மோனா அரவிந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், 15 நாட்களில் வீட்டுக்கு திரும்புவார் எனவும் அவரின் பெற்றோருக்கு வாட்ஸப்பில் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மோனாவின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், விசாரணையில் தற்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் வேலை பார்த்து வந்த சுரேந்திர ராணா (வயது 42) என்பவர் மோனாவை காதலித்து வந்துள்ளார்.
இந்த காதலுக்கு மோனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பலமுறை காதலை வெளிப்படுத்தும் பலன் இல்லை. சம்பவத்தன்று ஆத்திரமடைந்த சுரேந்திரன், மோனாவை கொலை செய்ய திட்டமிட்டு 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் எட்டாம் தேதி ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
பின் அந்த உடலை தனது உறவினர்களான ரவி (வயது 26), ராஜ் பால் (வயது 33) ஆகியோரின் உதவியுடன் புதைத்துள்ளார். மோனாவின் குடும்பத்தினருடன் போனில் தொடர்பு கொண்டு, அவ்வப்போது மோனா போல பேசி நம்பவைத்துள்ளார்.
கொலையானதும் அரவிந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துவிட்டதாகவும், விரைவில் வீட்டிற்கு வருவேன் என்றும், காதல் திருமணத்தால் பெற்றோரிடம் பேச பயமாக இருப்பதால், தான் பேசுவதாகவும் கூறி இருக்கிறார்.
அந்த சமயத்தில் கொரோனா பரவல் அமலில் இருந்ததால், இடமாற்றத்தை நம்பவைக்க போலியான தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் மற்றும் இ-பாஸ் உருவாக்கியும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மோனாவின் காதல் கணவன் போல பேசி நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
பல ஆண்டுகள் ஆகியும் மகள் வீட்டிற்கு வராத நிலையில், அவ்வப்போது வாட்ஸப்பில் மட்டும் பேசி வந்ததால் குடும்பத்தினருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணைக்கு பின்னர் சுரேந்திரா கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் மேற்கூறிய அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.