மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தன்னுடன் மட்டும் குடித்தனம் நடத்த வற்புறுத்திய லிவிங் டுகெதர் காதலி கொலை: பதறவைக்கும் சம்பவம்.!
டெல்லியில் உள்ள நங்கலாய் பகுதியை சேர்ந்த குடியிப்பில், கடந்த ஆகஸ்ட் மாதம் இளம்பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இவர் தனது கணவரை பிரிந்து குழந்தைகளுடன் கடந்த 6 ஆண்டுகளாக பீகாரை சேர்ந்த பங்கஜ் குமார் (39) என்பவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, மாயமான பங்கஜ் குமாரை அதிகாரிகள் 6 மாதங்களாக பல இடங்களில் தேடி வந்த நிலையில், சமீபத்தில் வழக்கறிஞர் உதவியுடன் முன்ஜாமீன் கேட்க முயற்சித்தபோது அதிகாரிகள் வலையில் சிக்கிக்கொண்டார். கைது செய்யப்பட்ட பங்கஜ் குமாரிடம் விசாரணை நடத்தியபோது கொலைக்கான காரணம் தெரியவந்தது.
அதாவது, திருமணமாகி மனைவி, குழந்தைகள் சொந்த ஊரில் இருக்கும்போது, டெல்லி வந்த அவருக்கும் - 26 வயது தமன்னா என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இருவரும் ஒரே குடியிருப்பில் இருந்துள்ளனர்.
கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த நிலையில், தமன்னா தனது கள்ளக்காதலரை மனைவியை பிரிந்து வருமாறு கூறியுள்ளார். விருப்பம் இல்லாத பங்கஜ், அவரின் வற்புறுத்தல் தாங்காமல் இறுதியில் அவரை கொலை செய்த சம்பவமும் நடந்துள்ளது.