மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காற்று மாசை குறைக்க, 40 மெட்ரோ இரயில் சேவைகள் கூடுதலாக இயக்கம் - டெல்லி மெட்ரோ அறிவிப்பு.!
இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் காற்று மாசு தொடர்பான பிரச்சனை கடுமையாக இருக்கிறது. இதனை கட்டுக்குள் வைக்க அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
டெல்லியில் மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படும் முக்கியமான பொதுப்போக்குவரத்தில் மெட்ரோவுக்கு முக்கிய இடம் உண்டு.
நாளொன்றுக்கு டெல்லி மெட்ரோ இரயில் நிர்வாகம் 4300 இரயில் சேவையை தனது வழித்தடங்களில் தொடர்ந்து இயக்கி வருகிறது. தற்போது காற்று மாசுபாடை குறைக்கவும், மக்களுக்கு விரைந்த சேவையை அடுத்தடுத்து வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, டெல்லி மெட்ரோ இரயில் நிர்வாகம் கூடுதலாக 40 இரயில் சேவைகளை வழங்குவதாக தெரிவித்துள்ளது. வார வேலை நாட்களான திங்கள் முதல் வெள்ளி வரை 4340 இரயில் சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.