மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிட்புல் ரக நாய் வெறிச்செயல்; கையில் இருந்த குழந்தையை கவ்வி ரணகொடூரம்.. நெஞ்சை நடுநடுங்க வைக்கும் காட்சிகள்.!
டெல்லியில் உள்ள புராரி பகுதியில், கடந்த ஜனவரி 2ம் தேதி ஒன்றரை வயதுடைய பச்சிளம் குழந்தையை வீட்டின் வெளியே சிறுமியின் தாத்தா கொஞ்சிக்கொண்டு இருந்தார்.
முதியவரின் கைகளில் குழந்தை இருக்க, அப்போது சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் நபர் தனது நாயுடன் வந்துள்ளார். அவர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிட்புல் ரக நாயை வாக்கிங் அழைத்து வந்துள்ளார்.
அச்சமயம் பச்சிளம் குழந்தையை நாய் பாய்ந்து கவ்வியது. கிட்டத்தட்ட நான்கு பேர் போராடியும், சில நொடிகள் வரை நாய் தனது கவ்விய வாயை திறக்கவில்லை.
நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு, நேற்று வீடு திரும்பினார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சியும் வெளியாகி இருக்கிறது.
இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்படவில்லை. இதனால் காவல் துறையினரும் விசாரணை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.
Video caution⚠
— Lavely Bakshi (@lavelybakshi) January 19, 2024
दिल्ली के बुराड़ी इलाके में पिटबुल द्वारा डेढ़ साल की बच्ची को दादा की गोदी से छीन कर बुरी तरह काटते हुए वीडियो हुआ वायरल। पीड़ित परिवार और पूरे एरिया को अभी भी पिटबुल का खौफ जारी @DelhiPolice pic.twitter.com/rUb8PAxcci