மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹோட்டல் ரூமில் 5 பெண்களுடன் 6 ஆண்கள்.. புரோக்கர் போல சென்று அதிரடி காண்பித்த அதிகாரிகள்.!
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் நெருங்கி இருக்கின்றன. இதனை முன்னிட்டு மக்கள் பண்டிகைகளை சிறப்பிக்க தயாராகி வருகின்றனர். இந்த சமயத்தில் பெருநகரங்களில் உள்ள செல்வந்தர்கள் பெண்களை விலைக்கு வாங்கி பாலியல் ரீதியாக பயன்படுத்துவதும் தொடருகிறது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ஏரோசிட்டி பகுதியில் செயல்படும் ஹோட்டலில், பாலியல் ரீதியாக பெண்களை பயன்படுத்த விற்பனை செய்யும் கும்பல் 5 பெண்களை விற்பனை செய்ய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், 5 பெண்கள் மற்றும் 6 ஆண்களை கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. 3 பெண்கள் அறையில் இருந்தபோது மீட்கப்பட்டனர். எஞ்சிய இரண்டு பேர் ஆண்களுடன் வெளியே இருந்தபோது மீட்கப்பட்டனர்.
காவல் அதிகாரிகள் தங்களை பெண்களை வாங்கும் புரோக்கர் போல பாவித்து சோதனை நடத்தி கும்பலை கைது செய்தனர். இவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. இந்த கும்பல் வாடிக்கையாளர்களுக்கு முதலில் பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி வைத்து, யுபிஐ வழியாக பணம் பெற்றதும் மேற்படி தனது நடவடிக்கையை தொடங்குகிறது என்பது விசாரணையில் அம்பலமானது.