மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செல்போன் பறிப்பில் கொடூரம்.. பெண்ணை 200 மீட்டர் இழுத்து சென்ற கொடூரம்.. பதைபதைப்பு வீடியோ.!
நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறிக்க முயற்சித்து, பெண்ணை 200 மீட்டர் சாலையில் தரதரவென இழுத்துச்சென்ற பதைபதைப்பு வீடியோ வெளியாகியுள்ளது.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள ஷாலிமார் பாக் பகுதியில், பெண்ணொருவர் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். இதன்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பெண்ணிடம் இருந்த செல்போனை பறித்து செல்ல முயற்சித்துள்ளனர்.
பெண்மணியோ செல்போனை கெட்டியாக பிடித்துக்கொண்ட நிலையில், செல்போனுடன் சேர்ந்து பெண்ணையும் சாலையில் 200 மீட்டர் வரை இழுத்து சென்ற கொடூர கும்பல், பெண்மணி நிலைதடுமாறி கீழே விழுந்ததும் அங்கிருந்து தப்பி சென்றது.
இதனால் அப்பகுதியே பெரும் பரபரப்புக்கு உள்ளாகிய நிலையில், நேற்று மாலை நடந்த சம்பவத்தின் சி.சி.டி.வி காமிரா காட்சிகள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், காயமடைந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
Live A mobile-snatching incident in the Shalimar Bagh area, in #Delhi on December 16, at 1735 hours,
— Harjeet Singh (@HarjeetSingh1h) December 17, 2021
So Be care full during on Journey
Other wise situation may be same #WorldStandsWithKohli #JusticeForKarthika #निषाद_समाज_भाजपा_के_साथ #RiteishDeshmukh pic.twitter.com/LJR1jO5yJh