மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை; கைப்பற்றப்பட்ட கடிதம்.!
டெல்லியில் உள்ள கமலா மார்க்கெட் பகுதியில் வசித்து வரும் 20 வயது பெண்மணி டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பெண்மணி தனது வீட்டின் அருகில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதியம் 3 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தகவலறிந்த காவல்துறையினர் பெண்ணின் வீட்டிற்கு விரைந்து அவரது உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பான விசாரணையில், பெண்ணின் தந்தை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.
அவர் மத்திய உளவுத்துறையில் பணியாற்றி வந்துள்ளார். அவரின் மரணத்திற்கு பின்னர் குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட நிலையில், இளம் பெண்ணின் தாய்க்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அவரின் தாய் தனது வேலையை கவனித்து வந்த நிலையில், தற்போது சிறுமி தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்துள்ளது. அவரின் மரணத்திற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. வீட்டில் சிறுமியின் கடிதம் ஒன்று இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.