"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
பற்றி எரியும் தீ.. போர்க்களமாக டெல்லி! கலவரத்தை அடக்க அரசு விடுத்த அதிரடி உத்தரவு! பதட்டத்தில் பொதுமக்கள்!
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஷாகின் பாக் பகுதியில் முஸ்லிம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதற்கு அப்பகுதியில் உள்ள மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற அந்த போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வீடுகள், கடைகள் மற்றும் பொது சொத்துக்களை அடித்து உடைத்து தீ வைத்தனர். இதில் டெல்லி முழுவதும் போர்க்களமாக மாறியுள்ளது. மேலும் முக்கிய பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வன்முறையில் காயமடைந்து 190 க்கும் அதிகமானோர் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர். பல்வேறு பகுதிகளில் துணை ராணுவ படையினர், டெல்லி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர். ஆனாலும் கலவரம் அடங்கவில்லை. இந்நிலையில் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் சில இடங்களில் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.
இவ்வாறு டெல்லி கலவரம் 3 நாட்களாக நீடிப்பதை தொடர்ந்து நேற்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். 3 முறை அவர் அதிகாரிகளை சந்தித்து சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து கூடுதலாக 35 கம்பெனி துணைநிலை ராணுவப்படை வடகிழக்கு டெல்லிக்கு விரைந்தது. அவர்கள் தொடர்ந்து ரோந்துப்பணிகளில் ஈடுபட்டனர். ஆனாலும் நேற்று இரவும் கலவரம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வடகிழக்கு டெல்லி பகுதியில் கலவரத்தை ஒடுக்க மத்திய அரசு கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு அமலுக்கு வந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வடகிழக்கு டெல்லி பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.