#JustIN: நாடே அதிர்ச்சி.. பார்வையற்ற இளம்பெண் பாலியல் பலாத்காரம்.. கண்ணீர் துயரம்., கயவன் அதிரடி கைது.!



delhi-visually-impaired-girl-sexual-assault

விழித்திறன் குறைபாடு கொண்ட பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்த காமுகன் கைது செய்யப்பட்டான். 

டெல்லியில் உள்ள துவார்கா, டாப்ரி பகுதியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளம்பெண் வசித்து வருகிறார். இந்த சம்பவத்தன்று தனது வீட்டில் தனியே இருந்துள்ளார். அப்போது, வீட்டிற்குள் நுழைந்த வாலிபன் ஒருவன், பெண்ணை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 

மேலும், பார்வையில்லாத மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் ரீதியாக சித்ரவதையும் செய்துள்ளான். இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி டாப்ரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். 

பெண்ணின் வீட்டிற்கு அருகில் இருக்கும் சி.சி.டி.வி-யை கண்காணிகையில் மர்ம நபரின் அடையாளம் பதிவாகவே, அதன் அடிப்படையில் பெண்ணை பலாத்காரம் செய்த காமுகனை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.