மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை கொன்று பிரீஸரில் வைத்த உணவக உரிமையாளர்.. சடலமாக மீட்ட காவல்துறை.!
காதலி ஒருத்தி இருக்கும்போதே மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய காதலன் முயற்சித்தது அம்பலமானதால், திருமணத்திற்கு வற்புறுத்திய காதலி கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
டெல்லியில் இருக்கும் நஜாப்கர் பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தில் இருந்து, 25 வயது பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலத்தை உணவகத்தின் பிரீஸரில் மறைத்து வைத்திருந்த நிலையில், காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பான விசாரணைக்கு பின்னர் உணவகத்தின் உரிமையாளர் சகில் க்ளோட் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக முதற்கட்ட விசாரணையில், பெண் பிரீஸரில் கொலை செய்யப்பட்ட பின்னர் 3 நாட்கள் வரை சடலமாக வைக்கப்பட்டுள்ளார்.
உணவகத்தின் உரிமையாளர் சகில் பெண்ணுடன் தொடர்பில் இருந்த நிலையில், வேறொரு பெண்மணியை திருமணம் செய்ய அவர் முடிவெடுத்து இருக்கிறார். இந்த விவகாரம் காதலிக்கு தெரியவந்தது, அவர் தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தி இருக்கிறார். இதுதொடர்பான வாக்குவாதத்தில் பெண்மணியை சகில் கொன்று பிரீசரில் வைத்துள்ளார்.