விவசாயத்தில் இறங்கிய தோனி; விளைநிலத்தை டிராக்டரில் உழுத வீடியோ வைரல்...!



Dhoni took to agriculture; Video of tractor plowing farmland viral...

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனி, தனது விளைநிலத்தை டிராக்டரில் உழவு செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் 90 டெஸ்ட், 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் ஆடி 17 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்ததுள்ளார். 

இவர் கேப்டனாக இருந்த போது இந்திய அணிக்கு ஒருநாள் உலக கோப்பை, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்றெடுத்த வீரர் என்ற பெருமைக்கும் சாதனைக்கும் சொந்தக்காரர்.

சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாக 2019-ஆம் வருடம் நடந்த ஒருநாள் உலக கோப்பையில் ஆடிய தோனி, 2020-ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். ஐபிஎல்லில் தொடர்ந்து ஆடிவருகிறார். 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற தோனி, விவசாயம், சினிமா என பல துறைகளில் இயங்கிவருகிறார். சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தமிழ் திரைப்படவுலகில் கால் பதிக்கிறார் தோனி.

மேலும் ராஞ்சியில் இருக்கும் தனது பண்ணையில் ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்து வருகிறார். அவரது பண்ணை நிலத்தில் டிராக்டர் மூலம் உழவு செய்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் தோனி பகிர்ந்துள்ளார். 

புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் தனி மகிழ்ச்சி என்றும், ஆனால் விவசாய வேலையை முடிக்க நீண்டநேரம் ஆவதாகவும் கூறியுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் வீடியோ  வைரலாகிவருகிறது.

தோனியை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளதாக ரசிகர்கள் ஆயிரக்கணக்கான கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.