ரூ.30 லட்சம் வைரமோதிரத்தை ஆட்டையப்போட பிளான்.. பாத்ரூமில் போட்டும் விடலையே.. நோண்டி எடுத்துட்டோம்ல..!



diamond-ring-rescued-from-toilet

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் ஹப்ளி பகுதியில் செயல்பட்டு வரும் அழகு நிலையத்திற்கு, பெண் ஒருவர் அலங்கார பணி செய்வதற்கு வந்துள்ளார். 

அவரது கையில் இருந்த மோதிரத்தை கடை பணியாளரிடம் கொடுத்த நிலையில், அந்த பெண் ரூபாய் 30 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள வைர மோதிரத்தை கொடுத்ததாக தெரிய வருகிறது. 

இதனை கடை ஊழியர் வாங்கி பெட்டியில் போட்டு வைத்துள்ளார். பின் அலங்காரம் முடிந்ததும் மோதிரத்தை திரும்பி வாங்காமல் அவர் வீட்டிற்கு சென்று விடவே, கடை ஊழியர் வைர மோதிரத்தை தனதாக எண்ணி பர்சில் வைத்துள்ளார். 

சிறிது நேரம் கழித்து பதறியபடி வந்த பெண்மணி வைர மோதிரத்தை கேட்க, அது குறித்து எங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளார். 

இதனால் பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளிக்க, கடையின் ஊழியர் தான் சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தில் கழிவறையில் மோதிரத்தை போட்டு தண்ணீர் ஊற்றி இருக்கிறார். 

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமாகவே, பிளம்பர் உதவியுடன் வைர மோதிரம் மீட்கப்பட்டது.