மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்ட உடல்! பிரேதத்தின் கண்களை எலிகள் கடித்து தின்றதால் பரபரப்பு!
ஆந்திர மாநிலம் எலுரு மாவட்டத்தை சேர்ந்தவர் வாசு. இவர் கடந்த செவ்வாய் கிழமை அகாலமரணம் அடைந்தார். அதனை அடுத்து அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அதன் பின்னர் அடுத்த நாள் அதாவது புதன் கிழமை காலை வாசுவின் உடலை பெற அவரது உறவினர்கள் மருத்துமனைக்கு வந்துள்ளனர். அப்போது பிரேதத்தின் கண்களை எலிகள் கடித்து குதறி இருந்தனர்.
அதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து பிரேதத்தை வாங்காமல் சண்டையிட்டனர். அதன் பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் வந்து அவர்களை சமாதானம் செய்தனர்.
மேலும் இந்த தவற்றிற்கு காரணம் மருத்துவமனையில் உள்ள பிரீசர் வேலை செய்யாமல் இருந்தது தான் காரணம் என மருத்துவ தரப்பிலிருந்து கூறப்படுகிறது.