#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
போதையில் மனைவியை கொல்ல முயன்ற கணவர்; இறுதியில் பரிதாப பலி.. குடிகாரனால் பத்ரகாளியான பெண்.!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முருகபவனம், இந்திரா நகரில் வசித்து வருபவர் கண்ணன் (வயது 50). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கண்ணனின் மனைவி மோகனா தேவி (வயது 48). கண்ணன் மதுபோதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது.
இதனால் கணவன் - மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே, நேற்றும் போதையில் வீட்டிற்கு வந்த கணவனை, மனைவி மோகனா கண்டித்து இருக்கிறார். இதனால் இருவரும் கடுமையான வாக்குவாதம் செய்துள்ளனர்.
கணவர் குத்திக்கொலை
இதனிடையே, ஆத்திரமடைந்த கணவர் கண்ணன், தனது மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயற்சித்துள்ளார். ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற மோகனாதேவி, தனது கணவரின் கையில் இருந்த கத்தியை பிடுங்கி, கணவரை 3 இடங்களில் சரமாரியாக குத்திக்கொலை செய்தார்.
இதையும் படிங்க: சரக்கு வாங்கிக்கொடுக்காத கணவரின் கழுத்தை நெரித்துக்கொலை.. நள்ளிரவில் பகீர் சம்பவம்.!
இந்த சம்பவத்தில் கண்ணன் நிலைகுலைந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், கண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மோகனா தேவியை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மேற்கூறிய தகவல் உறுதியானதைத் தொடர்ந்து, காவல்துறையினர் மோகனாவை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: நள்ளிரவில் அரங்கேறிய கொடூர சம்பவம்.. தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி!