மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல முஸ்லீம் இயக்குனர் இந்து மதத்திற்கு மாறுவதாக அறிவிப்பு.. நான் இந்தியண்டா..!
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர், கடந்த 8 ஆம் தேதி குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தனர். இவரது மரணம் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பல சர்ச்சைகருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பான புகாரில் பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மலையாள இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அலி அக்பர், இந்த விஷயத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். அவரின் பதிவில், "நமது நாட்டின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் குறித்து பலரும் சர்ச்சை கருத்துகளை பதிவு செய்கிறார்கள்.
அவர்களுக்கு எனது பதிலாக, முதலில் இந்தியன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்மறை கருத்துக்கு யாரும் கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. என்னை காயப்படுத்துகிறது. ஜெனரல் பிபின் ராவத் தீவிரவாதிகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.
அவரை அவமதிப்பது தேசத்தினை அவமதிப்பதற்கு சமம். ஆகையால், நான் இந்து மதத்திற்கு மாறுகிறேன். எனது பெயரையும் ராம் சிங் என்று மாற்றிக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.