மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை இன்னும் வைத்துள்ளீர்களா?.. உஷாரா இருங்க..!! வெளியான ஷாக் நியூஸ்..!!
இந்தியா முழுவதும் கடந்த 2016-ஆம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என தடை விதிக்கப்பட்டன. இந்த ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டபோது பழைய ரூபாய் நோட்டுகளை, புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
இருப்பினும் தற்போது வரை சிலர் இந்த பணத்தை மாற்றாமல் வைத்துள்ளனர். இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வெளிநாட்டினருக்கு ரிசர்வ் வங்கி காலக்கெடுவை நீட்டித்துள்ளது என்று கூறப்பட்டது.
இது தொடர்பான உண்மையை பரிசோதனை செய்த PIB வெளிநாட்டு குடிமக்களுக்கு பழைய ரூபாய் 1000, 500 நோட்டுகளை மாற்றும் செய்தியானது போலி என்பதை தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்கள் பழைய நோட்டுகளை மாற்றுவதாக நினைத்து இன்றைய பணத்தையும் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.