திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கொரோனா தடுப்பு போராட்டம்! திருமணம் நடைபெறவிருந்த நிலையில் டாக்டர்- போலீஸ் ஜோடி எடுத்த நெகிழ்ச்சி முடிவு!
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவிவருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி தற்போது 11000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பரவுவதை தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் என பலரும் இரவு பகல் பாராமல் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கேரளா, திருவனந்தபுரம் கனியகுளங்கரா காவல்நிலையத்தில் பணியாற்றுபவர் பிரசாத். இவருக்கும் அரசு சுகாதார மையத்தில் மருத்துவமனையில் பணியாற்றிய ஆர்யா என்பவருக்கும் இந்த மாதம் திருமணம் நடத்த இரு குடும்பத்தினரும் நிச்சயம் செய்திருந்தனர். மேலும் கொரோனா ஊரடங்கால் மிக எளிமையாக திருமணத்தை நடத்த முடிவு செய்திருந்தனர்.
ஆனால் தற்போது பிரசாத் மற்றும் ஆர்யா இருவரும் கொரோனா வைரசுக்கு எதிராக தீவிரமாக பணியாற்றி வரும்நிலையில் தங்களது பணிக்கு இடையூறாக இருக்கும் என கருதிய அவர்கள் தங்களது திருமணத்தை தள்ளிப்போட முடிவு செய்தனர். அதன்படி இருகுடும்பத்தாரின் அனுமதியின்படி அவர்களது திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.