கொரோனா 3-வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்குமா.? ஆய்வில் வெளிவந்த தகவல்.!



doctor talk about corona third wave

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதித்தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை குறைந்துவரும் நிலையில், 3-வது அலை விரைவில் தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். 

கொரோனா 3-வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் எய்ம்ஸ் இயக்குனர் மற்றும் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் குழந்தைகளிடம் செரோ ஆய்வை நடத்தியுள்ளனர். இந்த ஆய்வு 5 மாநிலங்களில் நடந்துள்ளது. 4,509 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். 

இந்த ஆய்வில் குழந்தைகளின் செரோ பரவல் 55.7 சதவீதமாகவும், பெரியவர்களின் விகிதம் 63.5 சதவீதமாகவும் இருந்துள்ளது. எனவே குழந்தைகளின் செரோ விகிதம் அதிகமாக இருப்பதாலும், பெரியவர்களுடன் ஒப்பிடக்கூடிய அளவில் இருப்பதாலும் கொரோனாவின் 3-வது அலை குழந்தைகளை அளவுக்கு அதிகமாக பாதிக்காது என நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.