மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யாருகிட்ட.. ஆக்ரோஷமாக புலியின் காதை கடித்து இழுத்த நாய்! வேடிக்கை பார்த்த சிங்கராஜா! வேற லெவல் வீடியோ!!
தற்காலத்தில் சமூக வலைத்தளத்தில் பறவைகள் மற்றும் விலங்குகள் குறித்த ஏராளமான, வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோக்கள் உயிரினங்களின் திறமைகளை வெளிப்படுத்தி ஆச்சரியமூட்டும் வகையிலும், சில வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் மிகவும் வேடிக்கையாகவும் இருக்கும்.
இதுபோன்ற வீடியோக்களை காண மக்கள் பெருமளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நாய் ஒன்று புலியின் காதை கடித்து இழுத்து சண்டை போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் நாயை கண்டு புலி கர்ஜித்தவுடன் நாய் புலியின் காதை கவ்வுகிறது. பின் கடித்து இழுத்து புலியின் காதை நாய் விடுவதாக இல்லை. மேலும் எவ்வளவோ முயன்றும் புலியால் மீளமுடியாத நிலையில் சோர்ந்து போன புலி ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கிறது. இதனை அருகில் நின்று சிங்கம் ஒன்று கவனித்துகொண்டு இருந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.