#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மருத்துவமனையில் வாலிபரின் கையை கவ்வி சென்ற தெருநாய்.! நடந்தது என்ன? பதற வைக்கும் சம்பவம்.!
மேற்கு வங்காளம் சிலிகிரி துர்காராம் காலணி பகுதியில் வசித்து வருபவர் சஞ்சய் சர்க்கார். இவர் அண்மையில் கடுமையான சாலை விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் அவரது வலது கை துண்டாகி பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவரை மீட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக சிலிகுரி மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் துண்டிக்கப்பட்ட கையையும் மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். இந்நிலையில் அதனைப் பெற்றுக் கொண்ட மருத்துவர்கள் பாதுகாப்பாக வைத்துள்ளதாகவும். விரைவில் ஆபரேஷன் மூலம் கையை பொருத்தவிருப்பதாகவும் அறிவித்துள்ளனர். சஞ்சய்க்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சுற்றி திரிந்த தெருநாய் ஒன்று மருத்துவமனையின் மொட்டை மாடியில் வாயில் எதையோ கவ்விக் கொண்டு செல்வதை அங்கிருந்த பொதுமக்கள் கண்டுள்ளனர்.பின்னரே அது துண்டிக்கப்பட்ட சஞ்சய்யின் கை என்பது தெரியவந்தது. இதையறிந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அந்த நாயிடம் இருந்து. அதனை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் நாய் பாதி கையை சாப்பிட்டுவிட்டது.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த கையை நாய் எப்படி எடுத்தது என மருத்துவமனைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.