சிறுமியை வெறியுடன் கடித்துக் குதறிய தெரு நாய்கள்.. அதிர்ச்சி வீடியோ!



Dogs attack 5 years old girl in uttarpradesh

உத்திரபிரதேசம் மாநிலம் அம்ரோஹா பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று தெரு நாய்கள் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கொடூரமாக தாக்கியதில், படுகாயம் அடைந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர்.

சிறுமி தற்போது பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரு நாய்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.