ரயில்களில் கண்டிப்பா இது மட்டும் செய்யாதீங்க..! மீறி செஞ்சா நீங்க தான் மாட்டுவீங்க..!



dont-do-train-after-10-pm

இந்திய ரயில்வே இரவு 10 மணிக்கு மேல் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என சில விதிமுறைகளை வகுத்துள்ளது. இதனை குறித்து மக்கள் பலருக்கும் இன்றும் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர்.

நாம் ரயிலில் பயணம் செய்யும் போது நம்மை தொந்தரவு செய்யும் விதமாக சிலர் இரவு நேரத்தில் லைட்டை ஆன் செய்து வைத்திருப்பர் ஒரு சிலரோ தங்களுக்கு தூக்கம் வரவில்லை என்பதற்காக சத்தமாக பேசி கொண்டிருப்பர்.இவ்வாறு இரவு நேரத்தில் உங்களை தூங்க விடாமல் சிலர் தொந்தரவு செய்வது ரயில்வே விதிமுறைகளின் படி தவறான செயல்களாகும்.

Indian railway

இதற்காகவே ரயில்வே நிர்வாகம் இரவு 10 மணி விதிமுறைகள் என சில தனியான விதிமுறைகளை வைத்திருக்கின்றது. அதன்படி இரவு 10 மணிக்கு மேல் டிக்கெட் பரிசோதனை செய்ய கூடாது. இரவு நேரத்தில் மற்றவர்களுக்கு இடையுறை ஏற்படுத்தும் விதமாக லைட்டுகளை ஒளிர விட கூடாது. சத்தமாக பேசவதோ, மிடில் பர்த் காரருக்கு படுக்க இடையுறாக இருத்தல், ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்வது போன்றவற்றை இரவு 10 மணிக்கு மேல் செய்ய கூடாது என இரயில்வே நிர்வாகம் விதிமுறைகளை வகுத்துள்ளது.