திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் இரட்டை கொலை... கொலையாளிகளை தீவிரமாக தேடி வரும் காவல்துறை.!
பெங்களூருவைச் சார்ந்த ஐடி நிறுவனத்தில் மேலாண்மை இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி அலுவலகத்தில் வைத்தே படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கொலையாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கர்நாடக தலைநகரான பெங்களூருவில் இயங்கி வரும் இணைய சேவை நிறுவனமான ஏரோனிக்ஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருந்தவர் பணிந்தா சுப்பிரமணியா மற்றும் முதன்மை செயல் அலுவலராக பணியாற்றி வந்தவர் வினுகுமார்.
இந்நிலையில் நேற்று நிறுவனத்திற்குள் வாளுடன் புகுந்த மர்மகும்பல் பணிந்தர சுப்பிரமணிய மற்றும் வினோத் குமார் ஆகியோரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. இந்த சம்பவத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில் இதற்கு முன் இவர்கள் இருவருடனும் பணிபுரிந்த ஃபெலிக்ஸ் என்பவர் இந்த இரட்டை கொலை சம்பவத்தை நடத்தி இருப்பதாக தெரிய வந்திருக்கிறது.
காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் ஏரோனிக்ஸ் நிறுவனத்தால் ஃபெலிக்ஸ் பணியாற்றி வந்த நிறுவனம் பாதிக்கப்பட்டதன் காரணமாக தொழில் போட்டியில் இந்தக் கொலை நடந்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. இந்த கொலை சம்பவத்தில் தலைமறைவாக உள்ள கொலையாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.