மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி கழிவறையில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம்.. மதுபோதையில் பள்ளிக்கூடத்தில் நுழைந்து வெறிச்செயல்.!
பள்ளி நேரம் முடிந்து வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுமிகளை இளைஞர் பலாத்காரம் செய்த கொடூரம் நெஞ்சை பதறவைத்துள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள பேகுசராய் மாவட்டம், பஞ்சவீர் பகுதியில் வசித்து வரும் 2 சிறுமிகள், அங்குள்ள நடுநிலைபல்லயில் படித்து வருகிறார்கள். இவர்கள் சம்பவத்தன்று பள்ளி நேரம் முடிந்து வளாகத்திலேயே விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது, பள்ளிக்குள் மதுபோதையில் வந்த சோட்டு என்பவர், சிறுமிகளிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் பதறிப்போன சிறுமிகள் அங்கிருந்து தப்பியோடி கழிவறையை தாழிட்டு உள்ளே ஒளிந்துகொண்டனர். ஆனால், காமுக கொடூரன் கழிவறையின் மேற்கூரையை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.
அங்கு இரண்டு சிறுமிகளில் ஒருவரை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், மற்றோரு சிறுமியையும் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதற்கிடையே, சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்துள்ளனர். இதனைக்கண்ட சோட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
பொதுமக்கள் சிறுமிகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு சிறுமிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவல் அறிந்த காவல் துறையினர், போக்ஸோவில் வழக்குப்பதிந்து சோட்டுவை தேடி வருகின்றனர்.