மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மது போதையில் மனைவி குழந்தைகளை அடித்துக் கொன்ற கொடூர கணவன்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள காசர்வடவல்லி பகுதியை சேர்ந்தவர் அமித். இவருக்கு பாவனா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருந்துள்ளனர். இதில் அமித் எந்த வேலைக்கும் செல்லாமல் மது போதைக்கு அடிமையாகியுள்ளார்.
இதனையடுத்து தினமும் குடித்துவிட்டு வந்து தனது மனைவி மற்றும் பிள்ளைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் அவரது மனைவி தனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று அவர் தனது மனைவி மற்றும் மகளை பார்ப்பதற்காக உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மனைவியை சமாதானப்படுத்த முயன்ற போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அமித் அங்கிருந்த கிரிக்கெட் பேட்டை எடுத்து தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளையும் அடித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய அமித்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.