#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒமிக்ரான் அச்சத்தால் தடைகள்.. நமத்துப்போன பட்டாசாக ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்.!
டெல்லி, மும்பை, சென்னை, புதுச்சேரி, பெங்களூர் நகரங்களில் ஆங்கில புத்தாண்டு தினம் பொதுமக்களால் கோலாகலமாக அனுசரித்து கொண்டாடப்படும். ஆனால், இந்த புத்தாண்டில் ஒமிக்ரான் வகை கொரோனா பரவல் அச்சம் காரணமாக பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டன. சென்னையில் இரவு 12 மணிக்கு மேல் இருந்து காலை 6 மணிவரை பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டது.
இதனைப்போல, அந்தந்த மாநில அரசுகள் மற்றும் காவல் துறையினர் சார்பில், பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. டெல்லியில் இரவு 10 மணிக்கு மேல் சாலைகளில் சுற்றித்திரிந்த நபர்களை வீடுகளுக்கு செல்ல காவல் துறையினர் அறிவுறுத்தினர். உணவகம் இரவு 10 மணியுடன் மூடப்பட்டது.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம், மத்திய அமைச்சகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் பாந்த்ரா - வோர்லி கடல் இணைப்பு பகுதி, சத்ரபதி சிவாஜி இரயில் நிலையம் வண்ண விளக்குகளால் ஜொலித்தது.
கொல்கத்தாவில் இருக்கும் பார்க் தெருவிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில், குஜராத்தின் கட் பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் புத்தாண்டை கொண்டாடினர். இதனைப்போல, ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் இராணுவ முகாமிலும் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. பல நகரங்கள் தடை உத்தரவுகள் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் பாதியை களையிழந்து.