மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பயங்கர சத்தம் ,வீடுகள் அதிர்வு பெங்களூரில் நிலநடுக்கமா? பீதியில் கலங்கிப்போன மக்கள்.!
பெங்களூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது போன்று பயங்கர சத்தம் கேட்டதாகவும் சில பகுதிகளில் வீடுகள் அதிர்ந்ததாகவும் வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக தலைநகரமான பெங்களூரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக மக்களிடையே பெரும் பீதி கிளம்பியுள்ளது.
இதுகுறித்து பெங்களூர் மக்கள் கூறியதாவது, இன்று மாலை வெடிகுண்டு வெடித்தது போல பயங்கரமான சத்தம் கேட்டது ,அதுமட்டுமின்றி வீடுகள் அதிர்ந்து ஜன்னல் கதவுகள் வேகமாக ஆடியதாகவும்,மேஜை நாற்காலிகள் நகர்ந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இதனால் அவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் .இது சமூக வலைதளங்களில் பரவி மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியது.
ஆனால் இது குறித்து புவியியல் நிபுணர்கள் கூறுகையில், பெங்களூரில் நிலநடுக்கம் எதுவும் ஏற்படவில்லை மேலும் ரிக்டர் அளவுகோலில் எதுவும் பதிவாகவில்லை என்று கூறியுள்ளனர்.
ஆனால் இந்த சத்தம் மற்றும் அதிர்வு எவ்வாறு ஏற்பட்டது என்பது தெரியாமல் மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.மேலும் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.