ஒரு புறம் கொரோனா! மறுபுறம் புலம் பெயர் தொழிலாளர்கள்.! இதற்கிடையில் அம்பான் புயல்..! மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்த மம்தா பானர்ஜி.



East CM mamtha banarsi asked help to central government

இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனாவை விட அதிக பாதிப்பை அம்பான் புயல் ஏற்ப்படுத்தியுள்ளதாக உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான அம்பான் புயலானது நேற்று மதியம் மேற்கு வங்கத்தின் டிகாவுக்கும் வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கும் இடையே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் போது காற்றானது 150 - 180 கிமீ வேகத்தில் வீசியதால் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பல தேசமடைந்தன.

Amphan puyal

இந்நிலையில் புயலால் ஏற்ப்பட்ட பாதிப்பு குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது, மேற்கு வங்கத்தின் தெற்கு மாவட்டத்தில் தான் அதிக பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதாகவும், பாதிப்புகளை கணக்கிட 3 அல்லது 4 நாட்கள் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். 

மேலும் அம்பான் புயலானது கொரோனாவை விட அதிக பாதிப்பை ஏற்ப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த சமயத்தில் மத்திய அரசு தங்களுக்கு ஒத்துழைப்பு தந்து மக்களை காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.