மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதுல யாரு சூப்பர்.! சிறுமியின் நடனத்தை பார்த்து யானை செய்த வேலையை பார்த்தீங்களா.! வைரலாகும் கியூட் வீடியோ.!
அண்மைக் காலமாக சமூக வலைத்தளத்தில் பறவைகள் மற்றும் விலங்குகள் குறித்த ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அவற்றில் சில ஆச்சரியமூட்டும் வகையிலும், சில பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையிலும் இருக்கும்.
இந்த நிலையில் தற்போது யானை ஒன்று சிறுமி நடனமாடுவதை கண்டு தனது உடலை அசைத்து ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை யார் நன்றாக ஆடியுள்ளனர்? என்ற கேள்வியுடன் ஐ.பி.எஸ். அதிகாரி திபான்ஷு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் யானை முன்பு நின்று தனது உடலை அசைத்து நடனமாடியுள்ளார்.
அதை கவனித்து உள்வாங்கிய யானை உற்சாகத்துடன் தனது காதுகளை ஆட்டி உடலை அசைத்து ஆடியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெருமளவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மேலும் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
Who did better? 😅 pic.twitter.com/ku6XRTTSal
— Dipanshu Kabra (@ipskabra) September 17, 2022