#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விமானத்தில் வெளிநாட்டு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயற்சித்த இளைஞருக்கு சிறை தண்டனை
மும்பையிலிருந்து இங்கிலாந்திற்கு சென்ற விமானத்தில் வெளிநாட்டு இளம்பெண் ஒருவருக்கு முத்தம் கொடுக்க முயற்சித்த இந்தியருக்கு இங்கிலாந்தில் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த ஹர்மன் சிங் என்ற இளைஞர் சில மாதங்களுக்கு முன்பு மும்பையிலிருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு டூரிஸ்ட் விசாவில் புறப்பட்டுள்ளார். இவர் சென்ற விமானத்தில் அவரது இருக்கைக்கு அருகிலேயே இங்கிலாந்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் அமர்ந்துள்ளார்.
விமானம் புறப்பட்ட பிறகு சிங் அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். அவரது பேச்சு பிடிக்காததால் அந்தப் பெண் அவருக்கு பதில் அளிக்கவில்லை. அதன் பின்னர் அந்த இளைஞரும் அமைதியாக இருந்துள்ளார்.
தனது இருக்கைக்கு அருகில் இருந்த அனைவரும் தூங்கிய பின்பு அந்த இளைஞர் பக்கத்தில் இருந்த இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அந்தப் பெண்ணுக்கு முத்தம் கொடுக்கவும் முயற்சித்துள்ளார். அந்தப் பெண் கையை விட்டு எழுந்து செல்ல முயன்றும் சிங் அவரை விடுவதாயில்லை.
சுமார் 15 நிமிடங்கள் அந்தப் பெண்ணுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக அந்தப் பெண் தப்பிச் சென்று விமானத்தின் பின் பகுதியில் இருந்த பணிப்பெண்களிடம் இதுகுறித்து கூறியுள்ளார். உடனே அவர்கள் மான்செஸ்டார் விமான நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து விமானம் தரையிறங்கியதும் ஹர்மன் சிங்கை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். முதலில் மறுப்பு தெரிவித்த ஹர்மன் சிங் பின்னர் அவரது தவறை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு மான்செஸ்டர் நீதிமன்றம் 12 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.