மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எல்லாம் சுத்த பொய்.. கடுப்பான அதானி குழுமம்.. என்ன காரணமாக இருக்கும்..?
சமீபத்தில் அமெரிக்காவின் ஹின்டன் பர்க் ஆய்வறிக்கையில் பங்குச் சந்தைகளில் அதானி குழுமம் மோசடி செய்துள்ளதாக கூறி தகவல் ஒன்றை வெளியிட்டது. இதனால் அதிர்ந்து போனா அதானி குழுமம் எல்லாம் சுத்த பொய் என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஹின்டன் பர்க் ஆய்வறிக்கையில் அதானி குழுமத்தின் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டால் அதானி குழும நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இது மட்டுமல்லாமல் உலக கோடிஸ்வரர்களின் பட்டியலில் அதானி பின்னுக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில் அதானி குழுமமானது தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இவ்வாறு வெளியிடப்பட்ட 413 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில் ஹின்டன் பர்கின் அறிக்கையானது நன்கு ஆய்வு செய்யப்பட்டது அல்ல என்றும் அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய வேண்டும் என்னும் ஒரே காரணத்திற்காக தங்களுக்கு அவபேரு ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.